யாழ். கோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டதற்கமைய புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அங்கு சென்று வாசிகசாலை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டிருந்தார்.

இன்றுமுற்பகல் 10.30மணியளவில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது வாசிகசாலைக்கான புனரமைப்பு வேலைகள் தொடர்பிலான தேவைகள் குறித்து வாசிகசாலை நிர்வாகத்தினர் பாராளுமன்ற உறுப்பினரிடம் கூறினார்கள். இதற்கான புனரமைப்பு வேலைகளுக்காக இயலுமானளவுக்கு நிதியினை ஒதுகிக்கித் தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இச்சந்திப்பில் கோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை தலைவர் குகேந்திரன், செயலாளர் ரஜிந்தன், வாசிகசாலை நிர்வாகத்தினர், கிராம சேவையாளர் கோபாலதாஸ், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் தி.நிரோசன், வலி கிழக்கு பிரதேசசபை உப தவிசாளர் ம.கபிலன், வலி கிழக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் இ.செல்வராஜா, சி.அகீபன், அ. உதயகுமார், கிராம சேவையாளர் கோபாலதாஸ் கலந்துகொண்டிருந்தார்கள்