யாழ். அச்சுவேலி வடக்கு விக்னேஸ்வரா கிளை வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றுகாலை (21.07.2019) 9.30மணியளவில் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது. அச்சுவேலி வடக்கு விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதைத் தொடர்ந்து இந்நிகழ்வு இடம்பெற்றது. அடிக்கல் நாட்டும் வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகிழக்கு பிரதேசசபையின் உப தவிசாளர் ம.கபிலன், வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் இ.செல்வராஜா, சி.அகீபன், அ.உதயகுமார், கோப்பாய் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.ஞானமாலா, சனசமூக நிலைய தலைவர் கிருஸ்ணராஜா, செயலாளர் குகநேசன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் வதனராஜா மற்றும் நிலைய நிர்வாகத்தினர் கலந்துகொண்டனர்.