யாழ். அச்சுவேலி அரசடி முதலாம் ஒழுங்கை இன்று (21.07.2019) காலை 10.00 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் தி.நிரோசன், வலி கிழக்கு பிரதேசசபை உப தவிசாளர் ம.கபிலன், வலி கிழக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் இ.செல்வராஜா, சி.அகீபன், அ. உதயகுமார், கிராம சேவையாளர் கோபாலதாஸ், இளைஞர்கள் மற்றும் பயனாளிகள்  கலந்து கொண்டிருந்தனர்.