யாழ். ஆனைக்கோட்டை உபதபால் அலுவலகத்தில் தபால் உத்தியோகத்தராகச் சேவையாற்றி ஓய்வுபெறும் திரு. சுப்பிரமணியம் கிருபாகரன் அவர்களின் சேவை நலன் பாராட்டு நிகழ்வு நேற்று (21.07.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30மணியளவில் ஆனைக்கோட்டை மூத்தநயினார் ஆலய இரத்தினசபாபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஓய்வுநிலை தபாலதிபர் மு.சண்முகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசியுரையினை மூத்தநயினார் தேவஸ்தான சிவஸ்ரீ க.கிருஸ்ணேஸ்வரக் குருக்கள் வழங்கினார். தலைமையுரை இடம்பெற்றதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண பிரதி அஞ்சல் அதிபர் நாயகம் மதுமதி வசந்தகுமார், யாழ். பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் கா.புஸ்பநாதன், மன்னார் ஓய்வுநிலை பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் ஆ.சுந்தரலிங்கம், யாழ். பிரதம தபாலக ஓய்வுநிலை பிரதம தபாலதிபர் ஐ.லோகஞானம், மானிப்பாய் அஞ்சல் அலுவலக தபால் அதிபர் உமாசந்திரன் ஜயந்தினி, ஆனைக்கோட்டை உபதபால் அதிபர் பா.சுகந்தினி உள்ளிட்ட தபால்துறை அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், கிராம அலுவலர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.