யாழ். வலிகாமம் கிழக்கு இருபாலை பாலம் புறொஜெக்ற் குறுக்குவீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நண்பகல் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது.

வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர் திரு. கஜேந்திரகுமார் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் தி.நிரோசன், வலி கிழக்கு பிரதேசசபை உப தவிசாளர் ம.கபிலன், வலி கிழக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் இ.செல்வராஜா, சி.அகீபன், அ.உதயகுமார், கஜேந்திரகுமார், கிராம சேவையாளர் கோபாலதாஸ், சமுர்த்தி உத்தியோகத்தர் ஜெயசிங்கம் இருபாலை கிழக்கு கிராம சக்தி சங்க தலைவர் ராஜன், இருபாலை கிழக்கு மாதர் சங்க தலைவர், இளைஞர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டிருந்தார்கள்.