யாழ். உரும்பிராய் செல்லப்பா சனசமூக நிலைய செல்லப்பா முன்பள்ளி மழலைகளின் விளையாட்டு விழா-2019 நிகழ்வு இன்று (28.07.2019) பிற்பகல் 2.00 மணியளவில் சனசமூக நிலைய தலைவர் இ.தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாக திரு இ.திலீபன், திரு க.விமலநாதன், திரு செ.வசந்தகுமார், வைத்தியர் இராகவன் ,ஆகியோரும் கெளரவ விருந்தினர்களாக திரு இ.சிவகுமார், திருமதி பிரியாபானு ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.