யாழ் கருகம்பனை கலாசார மண்டப திறப்பு விழா நேற்று (28.07.2019) மாலை 3.00 மணியளவில் தமிழ் மன்றம் சனசமூக நிலைய தலைவர் சி.பவநீதன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் முதன்மை விருந்தினர்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் கௌரவ விருந்தினராக யாழ் அரச அதிபர் நா.வேதநாயகன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வலி வடக்கு பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ, வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து ராஜராஜ ஸ்ரீ நகுலேஸ்வர குருக்களும், மஹாராஜ ஸ்ரீ இரத்தினசபாபதி குருக்களும் ஆசியுரை வழங்கினார்கள். இதனையடுத்து கருகம்பனை கலாசார மண்டபம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.