Header image alt text

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைக்கப்பட்ட உதயம் நகர் மற்றும் ஆதவன் நகர் ஆகிய இரண்டு மாதிரி கிராமங்களில் அமைக்கப்பட்ட 50 வீடுகள் இன்று புதன் கிழமை மக்களிடம் கையளிக்கப்பட்டது.

வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உதயம் நகர் மாதிரி கிராமத்திற்குள் 25 வீடுகளும் ஆதவன் நகர் மாதிரி கிராமத்தில் 25 வீடுகளுமாக மொத்தமாக ஐம்பது வீடுகள் அமைக்கப்பட்டு இருந்தது. Read more

கறுப்பு யூலையின் 36ம் ஆண்டு நினைவுதினம் ஜூலை மாதம் 23ம் திகதியாகிய இன்று முதல் எதிர்வரும் 27ம் திகதி வரையிலான ஐந்து நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது.

வெலிக்கடைச் சிறையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டமை, அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தமிழ்மக்கள் படுகொலை, தமிழர்களின் பொருட்கள், சொத்துகள் சூறை, தமிழ்மக்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றம் என்பன அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆட்சியில் அரச இயந்திரத்தின் பூரண அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது. 1983 ஜூலை 23ம் திகதி யாழ். திருநெல்வேலியில் தமிழ் இளைஞர்களின் கெரில்லாத் தாக்குதலில் 13படையினர் பலியானதைத் தொடர்ந்து தமிழ் மக்கள்மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. Read more

யாழ். வலிகாமம் கிழக்கு இருபாலை பாலம் புறொஜெக்ற் குறுக்குவீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நண்பகல் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது.

வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர் திரு. கஜேந்திரகுமார் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் தி.நிரோசன், வலி கிழக்கு பிரதேசசபை உப தவிசாளர் ம.கபிலன், வலி கிழக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் இ.செல்வராஜா, சி.அகீபன், அ.உதயகுமார், கஜேந்திரகுமார், Read more

யாழ். ஆனைக்கோட்டை உபதபால் அலுவலகத்தில் தபால் உத்தியோகத்தராகச் சேவையாற்றி ஓய்வுபெறும் திரு. சுப்பிரமணியம் கிருபாகரன் அவர்களின் சேவை நலன் பாராட்டு நிகழ்வு நேற்று (21.07.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30மணியளவில் ஆனைக்கோட்டை மூத்தநயினார் ஆலய இரத்தினசபாபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஓய்வுநிலை தபாலதிபர் மு.சண்முகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசியுரையினை மூத்தநயினார் தேவஸ்தான சிவஸ்ரீ க.கிருஸ்ணேஸ்வரக் குருக்கள் வழங்கினார். தலைமையுரை இடம்பெற்றதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண பிரதி அஞ்சல் அதிபர் நாயகம் மதுமதி வசந்தகுமார், யாழ். பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் கா.புஸ்பநாதன், மன்னார் ஓய்வுநிலை பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் ஆ.சுந்தரலிங்கம், Read more

யாழ். உடுவில் அம்மன்கோவில் வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (21.07.2019) 5.30மணியளவில் ஆசிரியர் திலீபன் தலைமையில் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது. அடிக்கல் நாட்டும் வைபவத்தில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேசசபை உறுப்பினர் திருமதி யோகாதேவி ரவிக்குமார், அம்மன் தேவஸ்தான பிரதம குரு, பிரதேச சபை உறுப்பினர் துவாகரன், இணைப்பாளர் சசி, கிராம சேவையாளர் மயூரன், சனசமூக நிலைய தலைவர் டினேஸ், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ர.யுகராஜ் மற்றும் ஊர்ப் பெரியோர்களும், பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
Read more

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவிலில் விகாரை அமைப்பதற்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன், கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் மற்றும் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை தர்மகர்த்தா சபையே தொடர்ந்தும் நிர்வகிக்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியா வெந்நீரூற்று பகுதியில் அத்துமீறி நுழைந்து சில அடாவடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக திருகோணமலை மேல் நீதிமன்றில் எழுத்தானை மனுவொன்று கடந்த 19ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது. Read more

யாழ். கோப்பாய் வடக்கு முதியோர் சங்கத்தின் மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்வு சங்கத்தின் தலைவர் தெய்வேந்திரம் அவர்களின் தலைமையில் நேற்று (21.07.2019) பகல் இடம்பெற்றது.

நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்ததோடு, சிறப்பு விருந்தினராக வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர் இ.செல்வராஜா அவர்கள் கலந்து கொண்டிருந்தார். இவ் ஒன்றுகூடலில் கோப்பாய் வடக்கு கிராம சேவையாளர் சண்முகவடிவேல், கோப்பாய் வடக்கு முதியோர் சங்க செயலாளர் கனகலிங்கம், சங்கத்தின் உபதலைவர் சோதிலிங்கம், சங்கத்தின் பொருளாளர் அருணகிரிநாதன்; அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவகுமார் மற்றும் முதியோர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.
Read more

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூரும் வகையில் பிரான்ஸில் இன்று அஞ்சலி நிகழ்வொன்று நடைபெற்றது.

இன்று 21.07.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00மணியளவில் பிரான்ஸின் 21 Rue Villot, 93120 la courneuve என்னுமிடத்தில் தோழர் கந்தசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கழகத்தின் பிரான்ஸ் கிளை இணைப்பாளர் தோழர் மார்டடீன் பெர்ணான்டோ உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.
Read more

யாழ். கோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டதற்கமைய புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அங்கு சென்று வாசிகசாலை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டிருந்தார்.

இன்றுமுற்பகல் 10.30மணியளவில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது வாசிகசாலைக்கான புனரமைப்பு வேலைகள் தொடர்பிலான தேவைகள் குறித்து வாசிகசாலை நிர்வாகத்தினர் பாராளுமன்ற உறுப்பினரிடம் கூறினார்கள். இதற்கான புனரமைப்பு வேலைகளுக்காக இயலுமானளவுக்கு நிதியினை ஒதுகிக்கித் தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இச்சந்திப்பில் கோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை தலைவர் குகேந்திரன், செயலாளர் ரஜிந்தன், வாசிகசாலை நிர்வாகத்தினர், கிராம சேவையாளர் கோபாலதாஸ், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் தி.நிரோசன், வலி கிழக்கு பிரதேசசபை உப தவிசாளர் ம.கபிலன், வலி கிழக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் இ.செல்வராஜா, சி.அகீபன், அ. உதயகுமார், கிராம சேவையாளர் கோபாலதாஸ் கலந்துகொண்டிருந்தார்கள்
Read more

யாழ். அச்சுவேலி அரசடி முதலாம் ஒழுங்கை இன்று (21.07.2019) காலை 10.00 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் தி.நிரோசன், வலி கிழக்கு பிரதேசசபை உப தவிசாளர் ம.கபிலன், வலி கிழக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் இ.செல்வராஜா, சி.அகீபன், அ. உதயகுமார், கிராம சேவையாளர் கோபாலதாஸ், இளைஞர்கள் மற்றும் பயனாளிகள்  கலந்து கொண்டிருந்தனர். Read more