மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பகுதியில் இருந்து சிசு ஒன்று மீட்கப்பட்டு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். மீராவோடை மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தாயுடன் செங்கலடியிலுள்ள தனியார் வங்கிக்கு சென்ற வேளை, வங்கிக்கு அருகில் பெண் சிசு ஒன்று இருப்பதைக் கண்டெடுத்து, குறித்த சிசுவை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ​நேற்று (31) மாலை 6 மணி அளவில் ஒப்படைத்துள்ளார்.

இக்குழந்தை 4 நாட்கள் மதிக்கத்தக்கதாகவும், 2970 கிராம் எடையுள்ளதாகவும் வைத்தியசாலையின் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.