யாழ் சுன்னாகம் கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் முன்னாள் முகாமையாளரும், மானிப்பாய் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தநதையாருமாகிய அமரா் வி.தர்மலிங்கம் அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா

இன்று (02.08.2019) வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் அதிபர் செல்வஸ்தான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் தெல்லிப்பளை துர்க்கா தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உருவச் சிலையினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ் மாநரசபை முதல்வர் ஆர்னோல்ட், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் உபதலைவர் ஜி.ரி.லிங்கநாதன், கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம், கட்சியின் செயற்குழு உறுப்பினர் சிவபாலசுப்பிரமணியம், நவாலியூர் கெளரிகாந்தன், வட மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராஜா, மாகாணசபை முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், முன்னாள வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன், தர்சன, நிரோசன் உள்ளிட்ட பிரதேசசபை தவிசாளர்கள், நகரசபை, பிரதேசசபை உறுப்பினர்கள், சமயப் பெரியார்கள், கல்விச் சமூகத்தினர், ஆசிரியர்கள், மாணவ மாணவியர், பெற்றோர்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தார்கள்.