யாழ். மானிப்பாய் மெமோரியல் 3ம் வீதிக்கான அபிவிருத்திப் பணிகள் இன்றுமாலை 5.00 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது.

இன்றைய அடிக்கல் நாட்டும் வைபவத்தில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதென்மேற்கு பிரதேசசபை தவிசாளர் ஜெபநேசன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நவாலியூர் கெளரிகாந்தன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யுகராஜ் , ஊர்ப் பெரியோர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டிருந்தார்கள்.