தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் புளொட்டின் வீரமக்கள் தின நிகழ்வு லண்டன் Bridge End Close, Off Clifton Road, Kingston Upon Thames, KT2 6PZ  என்னுமிடத்தில் 03.08.2019 சனிக்கிழமை மாலை 4.00மணியளவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் லண்டன் இணைப்பாளர் தோழர் அல்வின் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.

டொக்டர் சுரேஸ் சுரேந்திரன் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றல், மலர்மாலை அணிவித்தல், மலரஞ்சலி, மௌனஅஞ்சலி என்பன இடம்பெற்றன. தொடர்ந்து பிரமுகர்களின் உரைகள் இடம்பெற்றன. இதில் ஜேர்மனியிலிருந்து கலந்து கொண்டிருந்த கழகத்தின் மூத்த உறுப்பினர் தோழர் செல்லத்துரை ஜெகநாதன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் பொறுப்பாளர் அரவிந்தன், டொக்டர் பகீரதன் அமிர்தலிங்கம், ஜே.வி.பியின் ரஞ்சித் விஜயசிறீவர்த்தன, ரெலோவின் லண்டன் பொறுப்பாளர் சாம் சம்பந்தன், டொக்டர் சுரேஸ்; சுரேந்திரன், முன்னாள் ரெலோ உறுப்பினர் சோதிலிங்கம், முன்னாள் ஈரோஸ் உறுப்பினர் ரவி சுந்தரலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் திவாகன் ஆகியோர் உரையாற்றினார்கள். லண்டன் தோழர் பாலா அவர்கள் நன்றியுரையாற்றினார். நிகழ்வில் கழக தோழர்கள், சக அமைப்புக்களின் உறுப்பினர்கள் சார்ள்ஸ், வசந்தன், ஜே.வி.பி அங்கத்தவர்கள், பொதுமக்கள் என மண்டபம் நிறைந்தளவில் கலந்துகொண்டிருந்தார்கள்.