Header image alt text

கம்போடிய நாட்டின் விசேட அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இலங்கை மற்றும் கம்போடிய வர்த்தகர்களின் சந்திப்பொன்று நேற்று Phnom Penh நகரில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கம்போடிய பிரதமர் Samdech Akka Moha Sena Pakdei Techo HUN SEN உம் கலந்துகொண்டார். இலங்கை மற்றும் கம்போடியாவிற்கிடையில் வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் என்ற வகையில் பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளில் இணைந்து செயற்படவும் ஆடைகள், இரத்தினக்கல், கைத்தொழில் போன்ற பல்வேறு துறைகளில் இரண்டு நாடுகளுக்குமிடையில் இருந்துவரும் உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. Read more

அமெரிக்கா செல்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலர் கொல்லப்பட்டதுடன் அங்கு பரபரப்பான சூழ்நிலைகள் காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் அங்கு இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் வழிபாட்டுத் தலங்கள், சந்தைக் கட்டடத் தொகுதிகள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட மக்கள் அதிகமாக காணப்படும் சூழலில் செல்லும்போது அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Read more

யாழ். சாவகச்சேரி நகரசபை எல்லைக்கு உட்பட்ட ஏ9 பிரதான வீதியின் மடத்தடி சந்தியில் அமைந்துள்ள 2 வர்த்தக நிலையங்களில் நேற்று இரவு 9.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள வெல்டிங் கராஜ் மற்றும் பழக்கடை ஒன்றுமே தீப்பற்றி எரிந்தாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தீவிபத்தில் பழக்கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்தை அடுத்து யாழ். மாநகர சபை தீயணைப்பு பிரிவிற்கு அறிவித்ததை அடுத்து மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் குறித்த இடத்தில் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். தீ விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  Read more

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் அமைந்திருக்கின்ற குமரி குளத்தில் மீன் பிடிக்க சென்ற நபர் ஒருவர் மர்மமான நிலையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வழக்கமாக குறித்த குளத்தில் மீன் பிடிக்க சென்ற நபர் நேற்று மீன்பிடிக்கச் சென்ற நிலையில் வீடு திரும்பாத நிலையில் அயலவர்கள் இரவு முழுவதும் தேடி இன்று காலை சடலமாக மீட்டுள்ளனர். குறித்த நபர் பகல் வேளைகளில் மேசன் தொழில் செய்வதோடு, மாலை வேளைகளில் குறித்த குளத்தில் சென்று மீன் பிடித்து தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more