அமெரிக்கா செல்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலர் கொல்லப்பட்டதுடன் அங்கு பரபரப்பான சூழ்நிலைகள் காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் அங்கு இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் வழிபாட்டுத் தலங்கள், சந்தைக் கட்டடத் தொகுதிகள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட மக்கள் அதிகமாக காணப்படும் சூழலில் செல்லும்போது அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏனைய நாடுகளுக்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இவ்வாறான பயணத் தடைகளை விதிப்பதால் அதற்கு இணையாக இவ்வாறான எச்சரிக்கைகள் விடுக்கப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.