ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டதன் பின்னரே ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியை அமைக்க வேண்டும் என கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்காக, ஜனநாயக தேசியக் கூட்டணியை வெகுவிரைவில் அமைக்க வேண்டும் என தாமும், பிரதமரும் இணங்கியதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அமைச்சர் சஜித் பிரேமதாஸவே தங்களது வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் என்று தான் கருதுவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அவரிடம், ஊடகவியாலர்கள் கேள்வி எழுப்பியபோதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஆயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுவும், செயற்குழுவுமே அது குறித்து தீர்மானிக்க வேண்டும். இவ்விடயத்தில் பெரும்பான்மையானோரின் விருப்பத்திற்கு இடமளிக்க வேண்டுமெனவும் அமைச்சர் கூறியுள்ளார்.