ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழுவிற்கும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் எதிர்காலத்தில் தேர்தல் ஒன்று வருமானால் அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்களை இலங்கை அரசாங்கம் அழைத்தால் அவர்கள் கண்காணிப்புக்கு வருகைதர அவசியமான காரணங்கள் குறித்து ஆராயும் பொருட்டே இந்த நிபுணர்கள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.இந்த நிபுணர்கள் குழுவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் Mr.Riccardo Chelleri, Mr.Hans Weber, Ms.Dimitra Loannou. Ms.Pawel Jurczak மற்றும் Mr.Lan Miller ஆகியோர் கலந்துகொண்டனர்.