கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் கொச்சினுக்கு இடம்பெறும் விமானசேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இன்று முதல் 11 ஆம் திகதி வரை இந்த விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருக்கும் என, ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலதிக விவரங்களை 00914842362042 என்ற ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் கொச்சின் நகர காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளமுடியும். அத்துடன், ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் 24 மணித்தியால சேவை நிலையத்தின் 0094117771979 என்ற, தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்த முடியும். கொச்சின் விமான நிலையத்தில் வெள்ளப் பெருக்கு காரணமாக விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன