இலங்கை இராணுவத்தினருக்கான விசேட பயிற்சி வழங்கும் திட்டமொன்றினை ரஷ்யா முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கை இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க சமீபத்தில் 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்யா சென்றிருந்தார்.

குறித்த விஜயத்தின்போது அடுத்த வருடமளவில் இலங்கை இராணுவத்தின் 70 வீரர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்குவதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்தும்,அதற்கு பிறகு இலங்கையின் பாதுகாப்பு குறித்தும் அந்நாட்டு காலாட்படையின் தலைமை பணியாளரான ஒலெக் சாலியுகொவுக்கு இராணுவ தளபதி விளக்கமளித்துள்ளார். இதன்போது, இலங்கையின் இராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்குவது தொடர்பில் ஆலோசகர்கள் சிலரை இலங்கைக்கு அனுப்பவதற்கு தான் எதிர்பார்த்துள்ளதாக ஒலெக் சாலியுகொ தெரிவித்துள்ளார்.