கம்போடியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை 12.55 மணியளவில் ஜனாதிபதி உட்பட குழுவினர் இவ்வாறு நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கம்போடியா அரசின் விசேட அழைப்பின்பேரில் கடந்த 7 ஆம் திகதி ஜனாதிபதி அந்நாட்டுக்கு அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். இலங்கை ஜனாதிபதி ஒருவர் கம்போடியா அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டிருந்த முதல் முறை இதுவாகும்.