முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு திம்பிலி இளைஞர் கராட்டி கழகத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் மத்தியகுழு உறுப்பினரும்,

முன்னாள் வட மாகாண விவசாய அமைச்சருமான கந்தையா சிவநேசன் ஊடாக வழங்கப்பட்ட 10,000ரூபா நிதியினை கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் வே.சிவபாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று மேற்படி கராட்டி கழகத்திற்கு கையளித்துள்ளார். அவருடன் கட்சி அங்கத்தவர் நகுலனும் உடன் சென்றிருந்தார்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் ஜேர்மன் தோழர்கள் மேற்படி நிதியுதவியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.