ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்கியது பயங்கரமானது என, தெரிவிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கோட்டாவுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

‘நான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்கப்போவதாக பெசில் கூறியது பொய். ராஜபக்சர்கள் பேச்சை எவரும் நம்பப்போவதில்லை.’ ‘கட்சியா? நாடா என வரும்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட நாட்டுக்கே முன்னுரிமை கொடுப்பேன்.’ ‘கோட்டாவால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. ராஜபக்சர்கள் குடும்பத்திலிருந்து வேட்பாளரை தெரிவுசெய்வதற்கு, அவர்களின் அதிகார பேராசையே காரணம்.’ என்றார் அவர்.