Header image alt text

ஐக்கிய நாடுகளின் சமய அல்லது நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான அறிக்கையாளர் அஹமட் சஹீட் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பிலுள்ள அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி இலங்கை வரவுள்ள அவர் 26 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமய அல்லது நம்பிக்கைச் சுதந்திரத்துக்கான உரிமைகளை இலங்கை எவ்வாறு மேம்படுத்தி வருகிறது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அவர் இலங்கை வரவுள்ளார். Read more

எதிர்வரும் 23 ஆம் திகதியிலிருந்து 2019 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலானது நாட்டில் உள்ள சகல கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும், பிரதேச செயலக அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்படும்.

வாக்காளர்கள், தமது பெயர்கள் வாக்காளர் பட்டியல்களில் உள்ளடக்கப்படாமல் இருந்தால், அது தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும். வாக்காளர் பட்டியலில் தமது பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தால் மாத்திரமே வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடலில் தத்தளித்த இரண்டு வெளிநாட்டவர்களை கடற்படை உயிர் பாதுகாப்பு பிரிவினர் காப்பாற்றியுள்ளனர். தெவுந்தர, தலல்ல கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 2 வெளிநாட்டவர்களை கடற்படை உயிர் பாதுகாப்பு பிரிவினரும் கடற்படையின் நிவாரணப் பிரிவினரும் இணைந்து நேற்று இவர்களை மீட்டுள்ளனர்.

பொழுதுபோக்கு சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த சிலர் கடற்பிரதேசத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். இவர்களில் இருவர் கடல் அலைகளினால் அடித்து செல்லப்பட்டிருந்தனர். Read more

வவுனியா – மன்னார் வீதி, பூவரசங்குளம் பம்பைமடு இராணுவ முகாமிற்கு சற்றுத் தொலைவில் நோயாளர்களுக்கு பயன்படுத்திய வைத்தியசாலையின் கழிவுப் பொருட்களான சிறஞ்ச் மற்றும் சேலேன் போத்தல்களும் பாவிக்காத நிலையிலும் சில பொருட்களும் காணப்படுகின்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மன்னார் வீதி, பூவரசங்குளம் பம்பைமடு இராணுவ முகாமிலிருந்து 100மீற்றர் தொலைவில் வெற்றுப்பெட்டிக்கு அருகே குறித்த பொருட்கள் வீதி அருகே வீசிய நிலையில் காணப்படுகின்றன. இவை வைத்தியசாலையிலுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ள கழிவுப் பொருட்களாகவும் காணப்படுகின்றன. இதற்குள் சில பொருட்கள் பாவனையற்ற, புதிய நிலையிலும் காணப்படுகின்றது. Read more

வவுனியா குருமன்காட்டில் நேற்றிரவு 7மணியளவில் இடம்பெற்ற குழு மோதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருமன்காடு பகுதியில் இன்று மாலை 5மணியிலிருந்து இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு இரவு 7மணியளவில் மோதலாக மாறியதில் கண்ணாடி போத்தல், வாள், கத்திகள் போன்ற வௌ;வேறு பொருட்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். குறித்த தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more

பிரான்ஸ் நாட்டிற்கான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்படி கட்சியின் அந்நாட்டு அமைப்பாளராக ரங்கா, உதவி அமைப்பாளராக நவீந்திரன், நிர்வாகப் பொறுப்பாளராக தயா, உதவி நிர்வாகப் பொறுப்பாளராக கந்தசாமி,

நிதிப் பொறுப்பாளராக ஜெயந்தன், அங்கத்துவ நடவடிக்கைப் பொறுப்பாளராக குமரன், தகவல் பிரிவு பொறுப்பாளராக பிரேம்குமார், தகவல் பிரிவு உதவிப் பொறுப்பாளராக ஜெகதீசன், புனர்வாழ்வுப் பொறுப்பாளராக சுகுமார், புனர்வாழ்வு உதவிப் பொறுப்பாளராக பூபாலசிங்கம் ஆகிய தோழர்களும், நிர்வாக அங்கத்தவர்களாக உதயன், குறிஞ்சி, சீலன், சசி, சசி (வவுனியா) ஆகிய தோழர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.