வவுனியா – மன்னார் வீதி, பூவரசங்குளம் பம்பைமடு இராணுவ முகாமிற்கு சற்றுத் தொலைவில் நோயாளர்களுக்கு பயன்படுத்திய வைத்தியசாலையின் கழிவுப் பொருட்களான சிறஞ்ச் மற்றும் சேலேன் போத்தல்களும் பாவிக்காத நிலையிலும் சில பொருட்களும் காணப்படுகின்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மன்னார் வீதி, பூவரசங்குளம் பம்பைமடு இராணுவ முகாமிலிருந்து 100மீற்றர் தொலைவில் வெற்றுப்பெட்டிக்கு அருகே குறித்த பொருட்கள் வீதி அருகே வீசிய நிலையில் காணப்படுகின்றன. இவை வைத்தியசாலையிலுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ள கழிவுப் பொருட்களாகவும் காணப்படுகின்றன. இதற்குள் சில பொருட்கள் பாவனையற்ற, புதிய நிலையிலும் காணப்படுகின்றது. அரச வைத்தியசாலை அல்லது தனியார் வைத்தியசாலையிலிருந்து இப் பொருட்கள் பம்பைமடுப்பகுதிக்கு குப்பைகளை எடுத்து வரும்போது இவ்வாறு வீதியோரமாக தவறி வீழ்ந்திருக்கலாம் என்று சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் கழிவுப் பொருட்கள் பம்பைமடு இராணுவ முகாம் அருகே காணப்படுவதால் அப்பகுதியிலுள்ள மக்களுக்கு சந்தேகம் மேலும் அதிகரித்துக் காணப்படுகின்றதாக மேலும் தெரிவித்துள்ளனர்.