கடலில் தத்தளித்த இரண்டு வெளிநாட்டவர்களை கடற்படை உயிர் பாதுகாப்பு பிரிவினர் காப்பாற்றியுள்ளனர். தெவுந்தர, தலல்ல கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 2 வெளிநாட்டவர்களை கடற்படை உயிர் பாதுகாப்பு பிரிவினரும் கடற்படையின் நிவாரணப் பிரிவினரும் இணைந்து நேற்று இவர்களை மீட்டுள்ளனர்.

பொழுதுபோக்கு சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த சிலர் கடற்பிரதேசத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். இவர்களில் இருவர் கடல் அலைகளினால் அடித்து செல்லப்பட்டிருந்தனர். இதன்போது அருகில் இருந்த விகாரையில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் உடனடியாக கடற்படையினருக்கு இதனை அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து இவர்கள் மீட்கப்பட்டனர் . 28 மற்றும் 47 வயதைக் கொண்ட 2 ரஷ்ய பிரஜைகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.