Header image alt text

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வவுனியா பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டடம் ஒன்றை இன்று திறந்து வைத்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் இரண்டாவது சுகாதாரத்துறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வும், நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இலகு கடன் உதவியில் அமைக்கபடவுள்ள இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் இன்று பிற்பகல் 3 மணியளவில் வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்றது. Read more

மன்னார், மடு அன்னையின் வருடாந்த திருவிழாவுக்கு செல்லும் பக்கதர்களின் நலன்கருதி விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பில் இருந்த இன்று காலை 7.30 மணிக்க குறித்த ரயில் புறப்பட்டதுடன், பிற்பகல் 3 மணி அளவில் மடு ரயில் நிலையத்தை அண்மித்துள்ளது.

இதேவேளை, நாளை மாலை 4.30 க்கு மடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் குறித்த விசேட ரயில் இரவு 12.30 க்கு நீர்கொழும்பு ரயில் நிலையத்தை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ள.

செஞ்சோலை மாணவிகள் படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல், யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, உயிரிழந்த மாணவிகள் நினைவுகூறப்பட்டதுடன், சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.

கடந்த நான்காம் திகதி புளொட் அமைப்பு சார்பில், மறைந்த கழக செயலதிபர் மற்றும் கழகத் தோழர்கள், அனைத்து இயக்கப் போராளிகள், பொதுமக்கள் நினைவாக சுவிஸில் வீரமக்கள் தினம் அனுட்டிக்கப்பட்டது.

கிளிநொச்சி சக்தி இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் “யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோர் இல்லாத குடும்பத்தை சேர்ந்தவர்களும், உறவுகள் இல்லாத பிள்ளைகளும், தாய் தந்தை இருவரில் ஒருவரை இழந்த பிள்ளைகள் என பலதரப்பட்ட வறிய குடும்பத்தைச் சேர்ந்த 32 பெண் பிள்ளைகளும் 4 சிறுவர்களும் இல்லத்தில் தங்கியுள்ளனர். குறிப்பாக யுத்தம் நடந்த பிரதேசத்தை சேர்ந்த பிள்ளைகளே இங்கு உள்ளனர். Read more

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக யாரை நிய­மிப்­பது என்ற விட­யத்தில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்குள் தொடர்ந்தும் இழு­பறி நிலைமை காணப்­பட்டு வரு­கின்­றது. பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸவை வேட்­பா­ள­ராக நிய­மிக்­க­வேண்டும் என்று கட்­சியின் சிரேஷ்ட தலை­வர்கள் மற்றும் கனிஷ்ட தலை­வர்கள் பலரும் கோரி வரு­கின்ற நிலையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த விட­யத்தில் தொடர்ந்தும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் விடாப்­பி­டி­யாக இருந்து வரு­வ­தா­கவே தெரி­கின்­றது.

ஜனா­தி­பதி தேர்­தலில் தானே வேட்­பா­ள­ராக போட்­டி­யி­ட­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தீவி­ர­மாக உள்ளார். அவ­ருக்கு ஆத­ர­வா­கவும் பல சிரேஷ்ட தலை­வர்­களும் கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர். Read more

அர­சாங்­கத்­தினால் சிறந்த ஆட்சி நிர்­வாகம் மற்றும் வெளிப்­ப­டைத்­தன்மை உள்­ளிட்­ட­வற்றை மேம்­ப­டுத்­து­வ­தற்கு குறிப்­பி­டத்­தக்க நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்ற அதி­ருப்தி இலங்கை மக்கள் மத்­தியில் காணப்­ப­டு­வ­தாக பதவி முடிந்து செல்லும் இலங்­கைக்­கான பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இலங்­கைக்­கான பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் பத­வி­யி­லி­ருந்து விடை­பெ­ற­வுள்ள நிலையில் தொலைக்­காட்சி சேவை­யொன்­றுக்கு வழங்­கிய அவ­ரு­டைய இறுதி நேர்­கா­ண­லி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருக்­கிறார். சமா­தானம் மற்றும் நல்­லி­ணக்கம் போன்ற விட­யங்­களில் அர­சாங்­கத்­தினால் சில முன்­னேற்­ற­க­ர­மான நகர்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன என்று குறிப்­பிட்ட அவர், தகவல் அறியும் உரி­மையை அடிப்­படை உரி­மை­யாக்­கு­வ­தற்கு அர­சி­ய­ல­மைப்பில் மேற்­கொள்­ளப்­பட்ட மாற்­றங்­களைச் சுட்­டிக்­காட்­டினார். Read more

முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டத்தை சீர்த்திருத்த உடனடியாக நடிவடிக்கை எடுக்குமாறு, சுமார் 190இற்கும் மேற்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், 30ற்கும் மேற்பட்ட பொது அமைப்புகளும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசாங்கங்கள் இந்த சட்டத்தினை சீர்திருத்தத் தவறியமையானது மிகவும் நீண்ட காலப் பிரச்சினையாகக் காணப்படுவதுடன் முஸ்லிம் சமூகத்தின் மீதும் குறிப்பாக, பெண்கள், சிறுவர்கள் மீதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக, அவர்கள் இணைந்து அரசாங்கத்துக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர். Read more