ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக யாரை நிய­மிப்­பது என்ற விட­யத்தில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்குள் தொடர்ந்தும் இழு­பறி நிலைமை காணப்­பட்டு வரு­கின்­றது. பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸவை வேட்­பா­ள­ராக நிய­மிக்­க­வேண்டும் என்று கட்­சியின் சிரேஷ்ட தலை­வர்கள் மற்றும் கனிஷ்ட தலை­வர்கள் பலரும் கோரி வரு­கின்ற நிலையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த விட­யத்தில் தொடர்ந்தும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் விடாப்­பி­டி­யாக இருந்து வரு­வ­தா­கவே தெரி­கின்­றது.

ஜனா­தி­பதி தேர்­தலில் தானே வேட்­பா­ள­ராக போட்­டி­யி­ட­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தீவி­ர­மாக உள்ளார். அவ­ருக்கு ஆத­ர­வா­கவும் பல சிரேஷ்ட தலை­வர்­களும் கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர். பாரா­ளு­மன்ற குழுக்­கூட்­டத்­தையும் கட்­சியின் செயற்­கு­ழுக்­கூட்­டத்­தையும் கூட்டி வாக்­கெ­டுப்­பினை நடத்தி பெரும்­பான்­மையை பெறு­ப­வ­ருக்கு வேட்­பா­ள­ராக போட்­டி­யிட சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்று சஜித் அணி­யினர் கோரிக்கை விடுத்து வரு­கின்­றனர். இந்த விடயம் தொடர்பில் பிர­த­ம­ருக்கு கடிதம் அனுப்­பு­வ­தற்­காக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் கையெ­ழுத்­து­களும் பெறப்­பட்டு வரு­கின்­றன.

ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வேட்­பா­ளரை தெரி­வு­செய்­த­பின்பே தேர்­த­லுக்­கான பொதுக்­கூட்­ட­ணிக்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தை மேற்ளெ;­ள­வேண்டும் என்று சஜித் அணி­யினர் கோரி வரு­கி்­ன­றனர். ஆனால் பொதுக்­கூட்­ட­ணியை அமைத்­து­விட்டு வேட்­பா­ளரை தெரிவு செய்­ய­வேண்டும் என்று நிலைப்­பாட்­டி­லேயே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தொடர்ந்தும் இருந்து வரு­கின்றார்.

இந்த நிலையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அணியை சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் நேற்று கூட்­டுக்­கட்­சி­களின் தலைவர் ஒரு­வ­ரிடம் கருத்து தெரி­வித்­த­போது ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். பிர­தித்­த­லைவர் சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கு கீழ் பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்க இருக்க முடி­யாது. அவ்­வா­றான ஒரு நிலை ஏற்­பட்டால் அவர் அர­சி­யலில் இருந்து ஓய்வு பெற்று விடுவார். அத்­துடன் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யி­லி­ருந்து பலரும் வெளி­யேறும் நிலைமை ஏற்­படும் என்று கருத்து தெரி­வித்­துள்ளார்.

இவ்­வா­றான நிலையில் நேற்று மாலை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களது கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் போது பொது எதிரணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.