பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வவுனியா பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டடம் ஒன்றை இன்று திறந்து வைத்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் இரண்டாவது சுகாதாரத்துறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வும், நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இலகு கடன் உதவியில் அமைக்கபடவுள்ள இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் இன்று பிற்பகல் 3 மணியளவில் வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின, நெதர்லாந்து நாட்டின் துணைதூதுவர் ஈவா வான்வோசம்பா, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியூதீன், பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன், முன்னாள் மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் மருத்துவர்கள், அரச அதிகாரிகள் பலர்கலந்துகொண்டனர்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் வவுனியா வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியாவில் சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமலாக்கப்பட்ட உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தியுள்ளனர்.