மன்னார், மடு அன்னையின் வருடாந்த திருவிழாவுக்கு செல்லும் பக்கதர்களின் நலன்கருதி விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பில் இருந்த இன்று காலை 7.30 மணிக்க குறித்த ரயில் புறப்பட்டதுடன், பிற்பகல் 3 மணி அளவில் மடு ரயில் நிலையத்தை அண்மித்துள்ளது.

இதேவேளை, நாளை மாலை 4.30 க்கு மடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் குறித்த விசேட ரயில் இரவு 12.30 க்கு நீர்கொழும்பு ரயில் நிலையத்தை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ள.