அர­சாங்­கத்­தினால் சிறந்த ஆட்சி நிர்­வாகம் மற்றும் வெளிப்­ப­டைத்­தன்மை உள்­ளிட்­ட­வற்றை மேம்­ப­டுத்­து­வ­தற்கு குறிப்­பி­டத்­தக்க நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்ற அதி­ருப்தி இலங்கை மக்கள் மத்­தியில் காணப்­ப­டு­வ­தாக பதவி முடிந்து செல்லும் இலங்­கைக்­கான பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இலங்­கைக்­கான பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் பத­வி­யி­லி­ருந்து விடை­பெ­ற­வுள்ள நிலையில் தொலைக்­காட்சி சேவை­யொன்­றுக்கு வழங்­கிய அவ­ரு­டைய இறுதி நேர்­கா­ண­லி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருக்­கிறார். சமா­தானம் மற்றும் நல்­லி­ணக்கம் போன்ற விட­யங்­களில் அர­சாங்­கத்­தினால் சில முன்­னேற்­ற­க­ர­மான நகர்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன என்று குறிப்­பிட்ட அவர், தகவல் அறியும் உரி­மையை அடிப்­படை உரி­மை­யாக்­கு­வ­தற்கு அர­சி­ய­ல­மைப்பில் மேற்­கொள்­ளப்­பட்ட மாற்­றங்­களைச் சுட்­டிக்­காட்­டினார்.மேலும் உயிர்த்த ஞாயி­று­தின பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் தொடர்பில் கருத்து வெளி­யிட்ட உயர்ஸ்­தா­னிகர், தற்­போ­தைய நவீன பயங்­க­ர­வா­தத்தை எதிர்­கொள்­வ­தற்கு சர்­வ­தே­சத்­துடன் இணைந்து செயற்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அத­ன­டிப்­ப­டையில் தம்­மி­ட­முள்ள புல­னாய்வுத் தக­வல்­களை பரஸ்­பரம் பரி­மா­றிக்­கொள்­ளத்­தக்க வகையில் நாட்­டிற்குள் வெவ்வேறு புல­னாய்வு முகவர் நிலை­யங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டிய கட்­ட­மைப்பு மாற்­றங்கள் குறித்தும் வலி­யு­றுத்­தினார்.

அத்­தோடு உரிய தரு­ணத்தில் தேர்தல்களை நடத்துவது நாடொன்றின் ஜனநாயக செயற்பாட்டில் முக்கியமான விடயமாகும் எனக் கூறிய ஜேம்ஸ் டோரிஸ், மாகாணசபைத் தேர்தல்கள் தாமதிக்கப்படுகின்றமை குறித்தும் சுட்டிக்காட்டினார்.