கிளிநொச்சி மாவட்டத்தில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த 23 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. 
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிருஷ்ணபுரம் பகுதியில் படையினரின் பயன்பாட்டில் இருந்த காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரியவினால் இதற்கான ஆவணங்கள் நேற்று கையளிக்கப்பட்டன.

(அரசாங்க தகவல் திணைக்களம்)