சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 13 இலங்கையர்கள் அந்நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டு, சிறப்பு விமானம் ஒன்றில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று (16) காலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் மீன்பிடிப் படகு ஒன்றில் சிலாபம் பிரதேசத்தில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி சென்றிருந்தனர். 

இவ்வாறு நாடு கடத்தப்பட்ட 13 பேரும், இன்று காலை 6.30 மணியளவில் அவுஸ்திரேலியாவில் இருந்து BHVCI என்ற சிறப்பு விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்