பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடு தழுவிய பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அளுத்கே இதனை தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கல்வியின் குறைந்த பட்ச தரத்தை அமுல்படுத்தாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி பணி பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.