யாழ். குரும்பைகட்டி முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி இன்று (17.08.2019) சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் ஓய்வுபெற்ற பிரதி அதிபர் அ.அரியரட்ணம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், சுகிர்தன், உதவி கல்விப் பணிப்பாளர் தில்லைநாதன், கிராம சேவகர் பொ.தயாநிதி, முன்பள்ளி இணைப்பாளர் சுதாஜினிதேவி சுரேஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.