யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் சனசமூக நிலையமும் அரும்புகள் பாலர் முன்பள்ளியும் இணைந்து நடத்திய வருடாந்த விளையாட்டு விழா இன்று (18.08.2019) பி.ப. 2.00 மணியளவில் நிலைய முன்பள்ளி தலைவர் செல்வக்குமார் தலைமையில் வைரவர் ஆலய முன்றளில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்து கொண்டிருந்தார்.

கௌரவ விருந்தினர்களாக வலி தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் அ. ஜெபநேசன் , யாழ் பல்கலைகழக உதவி பதிவாளர் சு.ஐங்கரன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கிராம அலுவலர் நிருபன் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தனேஷ்வரன், முன்பள்ளி இணைப்பாளர் ஹேமநளினி , ஓய்வு பெற்ற ஆசிரியை கனகரத்தினம் , ஆசிரியர் சந்திரகாசன், விவசாயி ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.