யாழ். மாகியப்பிட்டி சூரியோதய வீதி, மறுமலர்ச்சி வீதி, விஸ்வா மில் வீதி, கொம்பனிப்புல வீதி ஆகிய வீதிகளை இணைக்கும் பிரதான வீதியின் புனரமைப்பு பணிகள் நேற்று ,(18.08.2019) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிராம எழுச்சி நிகழ்சித் திட்டத்தின்கீழ் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் இவ்வீதி புனரமைக்கபடுகின்றது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதென்மேற்கு பிரதேசசபை தவிசாளர் அ.ஜெபநேசன், பிரதேசசபை உறுப்பினர் அனுசன் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டிருந்தார்கள்.