கொழும்பு நகரில் காணப்படும் பாரிய வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் கொம்பனிவீதியில் இருந்து கோட்டை வரையில் பேர வாவியில் படகு சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை (22) முதல் மூன்று படகுகள் இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

தற்போது, கொழும்பு கோட்டையில் இருந்து கொப்பனி வீதிக்கு பஸ்ஸில் பயணிக்கும் போது சுமார் 30 நிமிடங்கள் எடுக்கும் நிலையில் இந்த படகுசேவையின் ஊடாக 9 – 10 நிமிடங்களில் பயணிக்க முடியும்.

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த சேவையை நாளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.