அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக நோயாளர்கள் கடும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

8 காரணங்களை முன்வைத்து வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் இன்று காலை 8 மணிமுதல் நாளை காலை 8 மணிவரையான 24 மணித்தியாலங்கள் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுக் கொள்வதில் நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.