பதவிகளை இராஜினாமா செய்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவர் மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர்.

பைசல் காசிம் மற்றும் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் மீண்டும் தமது இராஜாங்க அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர்கள் இருவரும் மீண்டும் பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.