கொழும்பில் இருந்து குப்பைகளை கொண்டு செல்லும் லொறிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, கொழும்பிலிருந்து அருவாக்காடு பகுதிக்கு  குப்பைகளை நகர்த்துவதற்கான செயற்பாடு, நேற்று (24) மீண்டும் தடைப்பட்டது.

புத்தளம், அருவக்காட்டுக்கு  குப்பைகளைக் கொண்டு சென்ற டிப்பர் வாகனம் மீதும், பாதுகாப்பு வழங்கச் சென்ற பொலிஸ் ஜீப் மீதும் நேற்று (24) காலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் தில்லையடிப் பகுதியில் வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குப்பைகளைக் கொண்டு சென்ற டிப்பர்கள் மீது மூன்றாவது தடவையாக இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது