சபாநாயகர் பதவியை தான், இராஜினாமா செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பொய்யானது என, சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சபாநாயகர் பதவியை இராஜினாமா  செய்வது தொடர்பில் கரு ஜயசூரிய இதுவரை தீர்மானம் எதையும் எடுக்கவில்லை என்றும் அந்த அலுவலகம் கூறியுள்ளது.

அத்துடன், சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வதற்கு  கரு ஜயசூரியவுக்கு எவ்விதமான காரணங்களும் இல்லை என்றும் அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவை சிக்கலுக்கு உள்ளாக்கும் முயற்சிகளில் ஈடுபடும் குழுவினரினால் இவ்வாறான போலியான செய்திகள் வெளியிடப்படுவதாகவும் இவ்வாறான செய்திகளை நம்பவேண்டாம் என, சாபாநாயகர் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் அந்த சபாநாயகர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.