அமெரிக்காவின் ஒக்லாந்த் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு தனது வாகனத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொள்ளை சம்பவம் ஒன்றின் போது இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.