மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹீம் மொஹமட் சோலியின் அழைப்பை ஏற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, செப்டெம்பர் 02ஆம் திகதி மாலைதீவுக்கு செல்லவுள்ளார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள், பல்வேறு துறைகளில் புதிய கூட்டாண்மைகளை உருவாக்குதல் மற்றும் இரு நாடுகளை பாதிக்கும் பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.