சஹ்ரானுடன் நுவரெலிய மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் அம்பாறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இவர்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) மற்றும் ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) அமைப்பின் உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வத்தேகெதர பகுதியை சேர்ந்த மொஹமட் ரைசுதீன் அப்துர் ரஹ்மான் எனும் அபூ அனஸ் என்பவராவார்.

குறித்த நபர் நுவ​ரெலியாவில் இடம்பெற்ற சஹ்ரானின் கருத்தரங்களில் கலந்து கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மாவனெல்ல, கொன்தெனியகொட பகுதியை சைனுல் ஆப்தீன் ஹப்சல் எனும் அபூ ராவா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சஹ்ரானின் ஹம்பாந்தோட்டை கருத்தரங்களில் கலந்து கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.