மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதனால் பிரதான வீதியின் போக்குவரத்த பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த 741 என்ற இலக்க புகையிரதமும் கொழும்பு கோட்டையில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த 412 என்ற இலக்கம் கொண்ட புகையிரதமுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதியுள்ளது.

விபத்தில் எவருக்கும் காயங்கள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.