கேகாலை சிறைச்சாலையில் திடீர் சுற்றிவளைப்​பொன்று, இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 4 அலைபேசிகள், 3 சிம் அட்டைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகள் திணைக்கள தலைமையகத்தின், புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை சிறைச்சாலையின் சிறப்புக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையிலேயே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.