சர்வதேச பொலிஸாரின் முழுமையான எச்சரிக்கை கட்டமைப்பின் அங்கத்துவ நாடாக இலங்கை நியமனம் பெறுவது முக்கியமானதமாகும்

என்று இன்டர்போல் சர்வதேச பொலிஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் ஜேர்கென் ஸ்டோக் (Jurgen Stock) தெரிவித்துள்ளார்.

உலகளாவிய பயங்கரவாதம் தற்பொழுது முன்னரிலும் பார்க்க எச்சரிக்கை பட்டியலில் முதலிடத்தில் இடம்பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இன்டர்போல் அமைப்பின் பொதுச் செயலாளர் நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் 17 தரவுக்கட்டமைப்பின் தகவல்களை பரிமாறுவதற்கு சர்வதேச பொலிஸ் அங்கத்துவ நாடுகளுக்கு தற்பொழுது சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச பயங்கரவாத அமைப்பின் 50 ஆயிரம் அங்கத்தவர்களின் தகவல்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளுக்காக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பில் இலங்கை பொலிஸாருக்கு தெளிவுபடுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதே போன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது இலங்கை அரச அதிகாரிகளின் விஷேட ஒத்துழைப்பு கிடைத்ததாகவும் சர்வதேச பொலிஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)