அமைச்சர் ரவி கருணாநாயக்கவை 14 நாட்களுக்குள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி விற்பனை மோசடி தொடர்பில் தவறான சாட்சியம் வழங்கிய குற்றச்சாட்டில், இவ்வாறு வாக்குமூலம் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிராதான நீதவான் இந்த உத்தரவை இன்று (29) பிறப்பித்துள்ளார்.