வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின்போது 27 சிறைக்கைதிகள் கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதல் இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று (30) தீர்மானித்துள்ளது.

ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதல் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் வெலிக்கடை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி பாதுகாப்பு பிரிவினருடன் ஏற்பட்ட மோதலின்போது 27 சிறைக்கைதிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.