தேர்தலுக்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்தாலும், பொதுஜன பெரமுன சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரை ஒருபோதும் மாற்றப்போவதில்லையென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (30) தெரிவித்துள்ளார்.

தீர்மானமொன்று எடுக்கப்பட்டால் அத் தீர்மானத்துடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், எவ்வகையிலும் தாம் எடுத்த தீர்மானத்தை மாற்றத் தயாரில்லை எனத் தெரிவித்துள்ளார்.