நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், இலங்கை சோசலிசக் கட்சி சார்பாக, சூழலியலாளர் கலாநிதி அஜந்தா பெரேரா போட்டியிடவுள்ளதாக, அக்கட்சி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில், 20 வருடங்களுக்குப் பின்னர், பெண் வேட்பாளர் ஒருவர் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க போட்டியிட்டு, ஜனாதிபதியான பின்னர், எந்தவொரு பெண் வேட்பாளரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவில்லை.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள வேட்பாளர் அஜந்தா பெரேரா,

நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டிய விதம் தொடர்பாக, தன்னால் அரசியல்வாதிகளிடம் எடுத்துரைக்கப்பட்ட போதும், அது பற்றி யாரும் கண்டுகொள்ளாததாலேயே, தான் வேட்பாளராக களமிறங்குவதாக அவர் கூறினார்.